நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

நெல்லை பாலாமடை பகுதியைச் சேர்ந்த சுதாகர் குடும்பத் தகராறு காரணமாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தனது மனைவி பேச்சியம்மாளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். ஞாயிற்றுக்கிழமை காலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சுதாகர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மனைவியின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சுதாகர் பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இக்கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *