நெல்லை அருகே போதையில் தாயைத் தாக்கிய மகனுக்கு நேர்ந்த விபரீத முடிவு
March 10, 2026

நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியில் மது போதைக்கு அடிமையான மாயாண்டி என்பவர், நள்ளிரவில் வீட்டிற்கு வந்து தனது தாய் லதாவுடன் உணவிற்காக தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மாயாண்டி தனது தாயை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த தாய் லதா, தற்காப்பிற்காக காய்கறி வெட்டும் கத்தியால் மகனின் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார்.
இந்த மோதலில் பலத்த காயமடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவந்திப்பட்டி காவல்துறையினர் லதாவை கைது செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற மகனை தாயே குத்திக்கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.