நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை விதிப்பு

நெல்லையில் 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு மரண தண்டனை விதிப்பு

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை தனி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி ஆனந்தசேகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிய நிலையில், பெற்றோரின் புகாரால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியதோடு பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். சிறார் பாதுகாப்பு மற்றும் நீதியை நிலைநாட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைத்துள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *