நூறு ஆண்டு வாழ ஆசையா அப்போ இந்த நாடுகளுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்
March 10, 2026

தூய்மையான நீர் மற்றும் சுத்தமான காற்று ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது. 2024 சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின்படி, எஸ்டோனியா உலகின் மிகத் தூய்மையான நாடாக முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து லக்ஸம்பர்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்களின் சிறப்பான கழிவு மேலாண்மை மற்றும் காற்றின் தரம் காரணமாக அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
பின்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளும் தூய்மைப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. இங்குள்ள கடுமையான சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் சுகாதார வசதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. பசுமை நிறைந்த சூழலும் பாதுகாப்பான குடிநீரும் இந்த நாடுகளில் வசிப்பவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.