நிலவில் மனித நகரம் அமைக்க எலான் மாஸ்க் அதிரடி திட்டம்

நிலவில் மனித நகரம் அமைக்க எலான் மாஸ்க் அதிரடி திட்டம்

விண்வெளி ஆய்வில் புரட்சி செய்து வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நிலவில் தன்னாட்சி பெற்ற மனித நகரத்தை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் நிலவில் வசிப்பிடங்களை அமைப்பது சாத்தியம் என்று அதன் நிறுவனர் எலான் மாஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனித நாகரிகத்தைப் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும், அதற்காக நிலவிற்கு விரைவாகச் செல்வதே முதல் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் கிரகத்தில் நகரம் அமைக்கும் கனவு நீடித்தாலும், தற்போதைய சூழலில் நிலவில் தளம் அமைப்பதே தங்களின் முதன்மைப் பணியாக இருக்கும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *