நிர்வாணமாக்கி தூக்கிலிட்டு, உடலை எரித்த கும்பல்! வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
December 20, 2025

வங்கதேசத்தின் மைமன்சிங்கில் மத நிந்தனை செய்ததாகக் கூறி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அந்த இளைஞரை நிர்வாணமாக்கி தூக்கிலிட்ட கும்பல், பின்னர் அவரது உடலை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்தியது.
காவல்துறையினர் உடலை மீட்ட போதிலும், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ஆர்வலர் உஸ்மான் ஹாதி கொலை மற்றும் ஊடக அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.