நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி

நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி

மவுண்ட் மவுங்கனுவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க வீரர் நகோபனி மோகோய்னா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பதிலுக்கு ஆடிய தென்னாப்பிரிக்கா 16.4 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கானர் எஸ்டர்ஹுய்சான் 45 ரன்களுடன் அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *