நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் மீண்டும் விற்பனைக்கு வந்தது
March 10, 2026

வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற மஹிந்திரா பிஇ 6 பேட்மேன் எடிஷன் மின்சார காரின் முன்பதிவு இன்று மார்ச் 10 காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது. ஏற்கனவே 135 வினாடிகளில் 999 கார்களும் விற்றுத்தீர்ந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இம்முறை முன்பதிவு தளம் நாள் முழுவதும் திறந்திருக்கும் நிலையில், ஏப்ரல் 10 முதல் டெலிவரி தொடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் கார் 79 kWh பேட்டரி மூலம் 683 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது. லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு மற்றும் 7 ஏர்பேக்குகள் கொண்ட இந்த மாடலின் விலை தற்போது 70 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு 28.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.