நிபுணர்களின் எச்சரிக்கை 2040 ஆம் ஆண்டில் உங்கள் மாத பட்ஜெட் இருமடங்காக உயரக்கூடும்

எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தின் தாக்கம் குறித்து பொதுமக்களிடையே கவலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு குடும்பத்தின் மாதச் செலவு 10,000 ரூபாயாக இருந்தால், 2040 ஆம் ஆண்டில் அதே வாழ்க்கைத்தரத்தைப் பேண 22,000 முதல் 23,000 ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். இந்தியாவின் நீண்டகால சராசரி பணவீக்க விகிதம் 5 முதல் 6 சதவீதமாகத் தொடர்ந்தால், அடுத்த 14 ஆண்டுகளில் ரூபாயின் வாங்கும் திறன் கணிசமாகக் குறையும் என அஞ்சப்படுகிறது.
நிதி ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் பணவீக்கத்தைச் சமாளிக்க இப்போதிலிருந்தே திட்டமிட்ட நீண்டகால முதலீடுகள் அவசியமாகும். வெறும் சேமிப்பு மட்டும் போதாது, மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பிபிஎஃப் போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முறையான நிதித் திட்டமிடல் இல்லையெனில், எதிர்கால விலை உயர்வைச் சமாளிப்பது கடினமாகிவிடும். எனவே, பணவீக்கத்திற்கு ஏற்ப இப்போதே சேமிக்கத் தொடங்குவது காலத்தின் கட்டாயமாகும்.