நிச்சயதார்த்தம் நின்ற ஆத்திரத்தில் காதலிக்கு எச்ஐவி ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கொடூர காதலன்

நிச்சயதார்த்தம் நின்ற ஆத்திரத்தில் காதலிக்கு எச்ஐவி ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய கொடூர காதலன்

ஹைதராபாத் பொச்சாரம் ஐடி காரிடார் பகுதியில் திருமண நிச்சயம் செய்யப்பட்ட இளைஞருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிந்ததால் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த 24 வயது இளைஞர், தனது முன்னாள் காதலிக்கு எச்ஐவி பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் வலுக்கட்டாயமாக உடலில் செலுத்தி கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மார்ச் 11 அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக இளைஞரை கைது செய்த போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த இளம் பெண் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *