நாய் மீது சேட்டை செய்த இளைஞன், வைரலாகும் வீடியோ
September 16, 2025

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நாய் மீது இளைஞன் ஒருவன் சேட்டை செய்து பின்னர் அதற்கு சரியான பாடம் கற்றுக் கொண்டான். அந்த வீடியோவில், இளைஞன் ஒரு நாய் குப்பைக் தொட்டியில் இருக்கும் போது அதை வேண்டுமென்றே தள்ளி, அதன் மூடியை மூட முயற்சிக்கிறான்.
இதனால் கோபமடைந்த அந்த நாய், குப்பைக் தொட்டியில் இருந்து வெளியே வந்து இளைஞனை விரட்டத் தொடங்கியது. அதைப்பார்த்த இரண்டு நாய்களும் அந்த இளைஞனைத் துரத்த ஓடின. நாய்களின் தாக்குதலுக்குப் பயந்து அந்த இளைஞன் அங்கிருந்து ஓடிவிட்டான். விலங்குகளைத் தொந்தரவு செய்ததால் அவனுக்கு சரியான பாடம் கிடைத்தது என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.