நானோ பனானா AI டிரெண்ட்: புகைப்படங்களை 3D ஆக மாற்றும் முன் கவனிக்க வேண்டிய தனியுரிமை ஆபத்துகள்!
September 16, 2025

கூகுள் ஜெமினி AI கருவியைப் பயன்படுத்தி, புகைப்படங்களை 3D அல்லது ரெட்ரோ தோற்றத்தில் மாற்றுவது இப்போது சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக மாறியுள்ளது. பலரும் நானோ பனானா AI டிரெண்டை ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர். ஆனால், இந்த டிரெண்டில் பங்கேற்பதற்கு முன், தனிப்பட்ட தரவு தனியுரிமை தொடர்பான ஆபத்துகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற AI தளங்களில் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றும் போது, உங்கள் தரவு நிறுவனத்தின் சேவையகங்களில் சேமிக்கப்படலாம். நிறுவனங்கள் தரவு பாதுகாப்பிற்கு உறுதியளித்தாலும், தரவு தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து எப்போதும் உள்ளது. எனவே, வெறும் டிரெண்டை பின்பற்றுவதற்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்.