நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த ஜோக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்த பிரதமர் மோடி
March 18, 2026

மாநிலங்களவை உறுப்பினர்களின் பணிநிறைவு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய நகைச்சுவை பேச்சு அவையையே சிரிக்க வைத்தது. முன்னாள் பிரதமர் தேவகவுடா தங்களை காதலித்துவிட்டு தற்போது பிரதமர் மோடியை திருமணம் செய்து கொண்டார் என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கார்கேவின் இந்த கலகலப்பான பேச்சைக் கேட்டு பிரதமர் மோடியும் உற்சாகமாக சிரித்தார். 54 ஆண்டுகால நட்பை சுட்டிக்காட்டி அரசியல் மாற்றங்களை அவர் நயமாக விமர்சித்த இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அரசியல் கடந்து அவையில் நெகிழ்ச்சியான சூழலை உருவாக்கியது.