நம்ம ஊர் ரயில் நிலையங்களை விட பிரம்மாண்டமான உலகின் பரபரப்பான ரயில் நிலையம் எது தெரியுமா
December 19, 2025

உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷின்ஜுகு நிலையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஹவுரா அல்லது மும்பை நிலையங்களை விட பல மடங்கு பெரிய இந்த நிலையத்தில் தினமும் சுமார் 38 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். மொத்தம் 36 பிளாட்பாரங்கள் மற்றும் 200 நுழைவு வாயில்களைக் கொண்ட இந்த நிலையம் ஒரு சிறிய நகரத்தைப் போலவே காட்சியளிக்கிறது.
இந்த நிலையத்திற்குள்ளேயே ஏராளமான வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளன. இதன் கிழக்கு பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ள நிலையில், மேற்கு பகுதியில் அழகான ஷின்ஜுகு கிவென் பூங்கா அமைந்துள்ளது. பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் இந்த நிலையம் உலகளவில் போக்குவரத்து மற்றும் வணிகத்தின் முக்கிய மையமாகத் திகழ்கிறது.