நடிகர் அஜித்குமாரின் ரேசிங் ஆர்வத்திற்கு கௌரவம் மற்றும் உலகின் முதல் ஃபார்முலா இ தீம் காரை பரிசளித்தது மஹிந்திரா
March 13, 2026

நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், மஹிந்திரா நிறுவனம் அவருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘உலகின் முதல் ஃபார்முலா இ தீம் பிஇ 6’ காரை பரிசாக வழங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், மஹிந்திரா குழுமத்தின் வாகனப் பிரிவுத் தலைவர் ஆர். வேலுச்சாமி இந்தக் காரை அஜித்திடம் ஒப்படைத்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் அஜித் ஆர்வம் காட்டி வருகிறார். துபாயில் பயிற்சி பெற்று வந்த அவர், போர்ப் பதற்றம் காரணமாக சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் இந்த கௌரவம் கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.