நச்சுப் பாம்புகளை உண்டாலும் மயில் உயிர் பிழைப்பது எப்படி நிபுணர்கள் வெளியிட்ட ரகசியம்

அழகிற்குப் பெயர்பெற்ற மயில் கொடிய விஷமுள்ள பாம்புகளை வேட்டையாடுவதில் வல்லமை படைத்தது. ஒரு நிமிடத்தில் விஷப்பாம்பை விழுங்கும் மயிலுக்கு அந்த விஷம் ஏன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது பலரின் ஆச்சரியமாகும். வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி பாம்பின் விஷம் என்பது ஒரு வகை புரதமாகும். இந்த விஷம் நேரடியாக ரத்தத்தில் கலந்தால் மட்டுமே உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் மயில் பாம்பை உண்ணும்போது அந்த விஷம் ரத்தத்தில் கலக்காமல் செரிமான மண்டலத்திற்குச் செல்வதால் சாதாரண உணவைப் போலவே ஜீரணமாகிவிடுகிறது.
மயிலின் வாய் அல்லது வயிற்றுப் பகுதியில் புண்கள் ஏதும் இல்லாத வரை விஷம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மனிதர்களைப் போல மயில்களுக்கு வயிற்றுப்புண் ஏற்படுவது மிக அரிதானது. எனவே பாம்பை விழுங்கிய பிறகும் மயில் எந்த ஆபத்துமின்றி ஆரோக்கியமாக இருக்கிறது. இயற்கையிலேயே மயில் பெற்றுள்ள இந்தத் தனித்துவமான பாதுகாப்பு அம்சம் அதனை விஷப்பாம்புகளிடம் இருந்து பாதுகாக்கிறது.