நக்வியை புறக்கணித்த இந்திய வீரர்கள்! மேடையில் பாகிஸ்தான் வாரிய தலைவருக்கு நேர்ந்த அவமானம்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மொஹ்சின் நக்வியை இந்திய வீரர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தனர். நக்வியிடமிருந்து பதக்கங்களைப் பெற மறுத்த வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட வீரர்கள், வேறு ஒரு அதிகாரியிடமிருந்து பதக்கங்களைப் பெற்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் பாகிஸ்தான் 347 ரன்கள் குவிக்க, இந்தியா 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தோல்விக்கு பிறகும் இந்திய வீரர்கள் காட்டிய இந்த உறுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏற்கனவே சீனியர் அணி இதேபோல் நக்வியை புறக்கணித்திருந்த நிலையில், தற்போது ஜூனியர் அணியும் அதே வழியைப் பின்பற்றியுள்ளது. தேச நலனே முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்திய வீரர்களின் இந்த நடவடிக்கை கிரிக்கெட் உலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.