தோலில் சிவப்பு தடிப்புகள் உள்ளதா? இந்த உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்!

தோலில் சிவப்பு தடிப்புகள், அரிப்பு மற்றும் செதில் போன்ற வறட்சி ஏற்படுவது சோரியாசிஸ் (Psoriasis) நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இது ஆரம்பத்தில் சாதாரண சருமப் பிரச்சினையாகத் தோன்றினாலும், சரியான கவனிப்பு இல்லையெனில் தீவிரமடையக்கூடும். மருந்துகளுடன் சேர்த்து, சரியான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றாவிட்டால் பாதிப்பு இன்னும் மோசமாகும்.
சோரியாசிஸ் என்றால் என்ன?
மருத்துவர்களின் கூற்றுப்படி, சோரியாசிஸ் என்பது ஒரு நீண்ட கால சரும நோயாகும். இது தோலில் சிவப்பு நிறத் தழும்புகள், கடுமையான அரிப்பு மற்றும் வெள்ளை நிறச் செதில்களை உண்டாக்குகிறது. இதை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான சிகிச்சை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
- துரித உணவுகள் (Fast Food): சமோசா, பக்கோடா, சிப்ஸ், பர்கர் மற்றும் பேக்கரி பொருட்கள் உடலில் நச்சுத்தன்மையை அதிகரித்து, வீக்கம் மற்றும் அரிப்பைத் தூண்டும்.
- காரமான மசாலாக்கள்: அதிகப்படியான மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
- மைதா உணவுகள்: நூடுல்ஸ், வெள்ளை ரொட்டி போன்ற மைதா கலந்த உணவுகள் செரிமானத்தைப் பாதித்து, சருமப் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
- சிவப்பு இறைச்சி மற்றும் பால் பொருட்கள்: ரெட் மீட், முட்டை, முழு கொழுப்புள்ள பால் மற்றும் வெண்ணெய் போன்றவை சோரியாசிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தீங்கானது.
- மது மற்றும் புகைபிடித்தல்: இவை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதோடு, மருந்துகளின் வீரியத்தையும் தடுக்கும்.
- சர்க்கரை: இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் உடலில் அலர்ஜியை (Inflammation) அதிகரிக்கும்.
எது சிறந்தது?
எளிதில் செரிமானமாகும் உணவுகள், பசுமையான காய்கறிகள் மற்றும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பது நல்லது. மன அழுத்தத்தைக் குறைத்து, முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் சோரியாசிஸைக் கட்டுக்குள் வைக்கலாம்.