தோனி உருவாக்கிய இரண்டு துருப்புச்சீட்டுகளால் இந்தியா மீண்டும் உலக சாம்பியன்
March 10, 2026

2024 வெற்றியைத் தொடர்ந்து 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் நீல நிறப்படையினர் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வியூகங்களுடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிவம் துபேயின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தோனியால் பட்டை தீட்டப்பட்ட பும்ரா தொடர் நாயகனாகவும், துபே மிடில் ஆர்டரில் மிரட்டலாகவும் செயல்பட்டனர். மைதானத்தில் நேரில் இருந்த தோனி, இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளதாக உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார். கம்பீரின் பயிற்சியில் அணியின் இந்த தொடர் வெற்றி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.