தொடர் விடுமுறை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி
March 19, 2025

இந்த மாத இறுதியில், மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்கிறது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை தினம் மற்றும் ஏப்ரல் 1 (செவ்வாய்க்கிழமை) வங்கிக் கணக்கு முடிவு தினம் ஆகியவை அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அரசு ஊழியர்களும் நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையை அனுபவிக்கலாம். சமூக ஊடகங்களில் இதை பற்றிய மீம்ஸ்கள் வேகமாக பரவுகின்றன. இந்த விடுமுறையில் நீங்கள் எதை செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?