தொடர் வலிகளிலிருந்து விடுதலை பெற கருணைக்கொலை முடிவை எடுத்த இளம் பெண்
March 27, 2026

ஸ்பெயினின் பார்சிலோனாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் நோயேலியா ராமோஸ், நீண்ட கால உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்குப் பிறகு கருணைக்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். வன்கொடுமையால் முடக்கப்பட்ட இவர், அமைதியான மரணத்தையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மார்ச் 27 முதல் தொடங்கப்படவுள்ளன.
இந்த முடிவை நோயேலியாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்த போதிலும், ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. மகளின் பிரிவால் குடும்பத்தினர் நிலைகுலைந்துள்ள நிலையில், அவரது தாய் தனது மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து இறுதிவரை அவரோடு இருக்கப்போவதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.