தொடர் சோர்வு மாரடைப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை
March 11, 2026

அதிகப்படியான உடல் சோர்வு மற்றும் மயக்க உணர்வை சாதாரணமானதாகக் கருதி அலட்சியப்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60-க்கும் குறைவாகக் குறையும் போது, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக ‘பிராடி கார்டியா’ என்று அழைக்கப்படும் இந்நிலை உயிருக்கே ஆபத்தாக முடியும்.
தடகள வீரர்களுக்கு இது இயல்பானது என்றாலும், மற்றவர்களுக்கு மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக இசிஜி பரிசோதனை செய்வது அவசியம். நவீன பேஸ்மேக்கர் சிகிச்சை மூலம் இதயத்தின் செயல்பாட்டைச் சீராக்க முடியும். எனவே, இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் இதய சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.