தொடர் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உயிருக்கே ஆபத்தான இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

தொடர் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உயிருக்கே ஆபத்தான இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்

தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் பலவீனத்தை வெறும் தூக்கமின்மை என்று அலட்சியப்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியும். இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60-க்கும் கீழே குறையும் போது, உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. மருத்துவ மொழியில் ‘பிராடிகார்டியா’ எனப்படும் இந்நிலை, மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விளையாட்டு வீரர்களுக்குக் குறைந்த இதயத் துடிப்பு இயல்பானது என்றாலும், மற்றவர்களுக்கு இது இதயம் தொடர்பான சிக்கலைக் குறிக்கலாம். இசிஜி (ECG) பரிசோதனை மூலம் பாதிப்பைக் கண்டறிந்து, மருந்துகள் அல்லது நவீன பேஸ்மேக்கர் கருவிகள் உதவியுடன் இதயச் செயல்பாட்டைச் சீராக்க முடியும். எனவே, இத்தகைய அறிகுறிகளைச் சாதாரணமாக எண்ணாமல், தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்று ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *