தேவா ஜீவா எப்படி படிப்பார்கள் முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி

தேவா ஜீவா எப்படி படிப்பார்கள் முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி

தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலினின் விளம்பர யுத்தியை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ரீல்ஸ் புகழ் சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவைச் சந்தித்த முதலமைச்சர், அவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார். ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அவர்கள் எப்படி உயர்பதவிகளுக்கு வர முடியும் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே ஐந்து வகுப்புகளைக் கவனிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் கவனத்தை திசைதிருப்பவே இத்தகைய விளம்பரப் படங்கள் வெளியிடப்படுவதாகவும், இது மாணவர்களின் உண்மையான கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாத செயல் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தலில் இதற்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *