தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தலைமைச் செயலகத்தில் அகற்றப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்கள்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் தலைமைச் செயலகத்தில் அகற்றப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள் மட்டுமின்றி, அரசு திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகளையும் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *