தேர்தல் நடத்தை விதிகளால் முடங்கியது ஒன்றரை கோடி பெண்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் உள்ள 1.51 கோடி சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திமுக அரசின் திட்டம், தேர்தல் தேதி அறிவிப்பால் திடீரென முடங்கியுள்ளது. இன்று காலை இந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவிருந்த நிலையில், நேற்று அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் தடையாக மாறியுள்ளன. இத்திட்டம் மூலம் அரசு கஜானாவை காலி செய்ய முயற்சி நடந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பு நிதியாக 5000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், பீகார் மாநில பாணியில் இந்த 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் திட்டமிடப்பட்டது. தேர்தலுக்கு முன்பே இத்தொகையைச் செலுத்த ஸ்டாலின் அரசு முயன்ற போதிலும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் அந்தப் பிளான் தவிடுபொடியானது. இது திமுகவிற்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.