தேர்தல் கெடுபிடிகளுக்கு இடையே பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அர்ச்சனா பட்நாயக்
March 16, 2026

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது பொதுமக்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். உரிய ஆவணங்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனே திரும்பப் பெறலாம் என்றும், இதுவரை 1.26 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைக்க வசதிகள் செய்யப்படும். பிரச்சாரங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.