தேர்தல் கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவே இறுதியானது என அண்ணாமலை அதிரடி

தேர்தல் கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவே இறுதியானது என அண்ணாமலை அதிரடி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும், அவருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். விஜய் தலைமையிலான கட்சியுடன் கூட்டணி குறித்து எடப்பாடியார் கூறிய கருத்தே இறுதியானது என அவர் தெளிவுபடுத்தினார்.

திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கோயம்புத்தூரில் நடைபெறும் போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார். செந்தில் பாலாஜியின் அரசியல் முறைகேடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், வரும் தேர்தலில் திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தை முறியடித்து மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என உறுதிபடத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *