தேர்தல் அறிவித்த 24 மணிநேரத்தில் கோடிகளில் பறிமுதல் மற்றும் 2106 பறக்கும் படைகள் அதிரடி

தேர்தல் அறிவித்த 24 மணிநேரத்தில் கோடிகளில் பறிமுதல் மற்றும் 2106 பறக்கும் படைகள் அதிரடி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திற்குள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களைத் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருவதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும், இதில் அரசு விடுமுறை நாட்களில் மனுத் தாக்கல் செய்ய முடியாது. வாக்குச் சாவடிகளில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை வைக்கப் பாதுகாப்புப் பெட்டக வசதி செய்து தரப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *