தேஜஸ் போர் விமானங்களை அதிரடியாக தரையிறக்கிய இந்திய விமானப்படை
February 23, 2026

சமீபத்தில் நிகழ்ந்த தேஜஸ் போர் விமான விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த ரக விமானங்களின் செயல்பாட்டை இந்திய விமானப்படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 30 ஒற்றை இருக்கை போர் விமானங்களும் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார்.
தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளாவது இது மூன்றாவது முறையாகும் என்பதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. 2024-ல் ஜெய்சால்மரிலும், கடந்த ஆண்டு துபாய் விமானக் கண்காட்சியிலும் இத்தகைய விபத்துகள் நிகழ்ந்தன. தற்போதைய தொழில்நுட்ப சிக்கல்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, மீண்டும் தேஜஸ் விமானங்கள் விண்ணில் பாய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.