தெலங்கானாவில் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட கொடூரம்
March 15, 2026

தெலங்கானா மாநிலம் கிஷ்டாபூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அந்த மாநிலத்தில் 1300 நாய்கள் வரை கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விலங்கு நல அமைப்பின் புகாரைத் தொடர்ந்து, ஜன்னாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நாய்களை விஷ ஊசி போட்டு கொன்று ஆற்றின் அருகே புதைத்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.