தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் மறியல்
March 16, 2026

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் வெடித்தது. குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறிய அரசுக்கு எதிராகத் திரண்ட போராட்டக்காரர்கள், நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக் கோரிக்கை விடுத்தனர். பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியலைக் கைவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.