தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் தாமதமாக வந்த கனிமொழி எம்பிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் தாமதமாக வந்த கனிமொழி எம்பிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினரை சந்திக்க வந்த திமுக எம்பி கனிமொழியை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், உடனடியாக வராமல் தற்போது வந்தது ஏன் என ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களின் கோபத்திற்கு இடையே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கனிமொழி, குற்றவாளிகளை பிடிக்க ஏடிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல்வர் இந்த வழக்கை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மாணவிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *