தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் போலீசாரின் மெத்தனத்தால் பறிபோன உயிர்

தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் போலீசாரின் மெத்தனத்தால் பறிபோன உயிர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியதோடு, மாணவியின் நடத்தையை விமர்சித்து பெற்றோரை அலைக்கழித்ததாக அவரது தந்தை கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

நன்றாக படிக்கக்கூடிய அந்த மாணவியின் உடல் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கு சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு பேசி வரும் வேளையில், காவல் துறையினரின் இத்தகைய செயல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *