தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை வழக்கில் கொலையாளிகளை நெருங்கும் நான்கு தனிப்படைகள்
March 16, 2026

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுப்பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவியின் உடல் வன்கொடுமை செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளன.