துபாயின் பணக்கார குடியிருப்பு பகுதியில் ஈரான் ட்ரோன் தாக்குதல் பெரும் பதற்றம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், துபாயின் முக்கிய பகுதியான டவுன் டவுன் பகுதியில் ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அல் பதா குடியிருப்பு பகுதியில் இந்த ட்ரோன் விழுந்து வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் ஏதுமில்லை என அதிகாரிகள் கூறினாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் இப்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல் பெர்சிய வளைகுடாவில் ஒரு சரக்கு கப்பல் தாக்கப்பட்டதோடு, பஹ்ரைன் மற்றும் குவைத்திலும் ட்ரோன் ஊடுருவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியை நோக்கியும் ஏவப்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவதால், இப்பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேச அளவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.