தீராத சோர்வு வைட்டமின் பி1 குறைபாடா அல்லது இதய நோய்க்கான அறிகுறியா

காரணமற்ற நீண்ட கால சோர்வு என்பது வெறும் மன அழுத்தம் மட்டுமல்ல உடலில் வைட்டமின் பி1 அல்லது தையமின் சத்து குறைபாட்டின் தீவிர அறிகுறியாகும். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாட்டால் உடலில் ஆற்றல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமாகத் தெரிவதால் இதனை கண்டறிவது கடினமாகிறது. சரியான பரிசோதனை இல்லையெனில் இது எதிர்காலத்தில் பெரிய அளவிலான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
உடலில் தையமின் சேமிக்கும் திறன் குறைவாக இருப்பதால் முறையற்ற உணவுப் பழக்கத்தால் விரைவில் இதன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எரிச்சல் மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஏற்படுவதுடன் பெரிபெரி போன்ற தீவிர நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. இது நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை நேரடியாகப் பாதித்து இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே நிபுணர்களின் ஆலோசனையுடன் சரியான உணவு மற்றும் கூடுதல் சத்துக்கள் மூலம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.