திரையுலகின் கஸ்டிங் கவுச் கொடுமை குறித்து மனம் திறந்த நடிகர் ரன்வீர் சிங்
March 27, 2026

பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் தனது ஆரம்பகால சினிமா பயணத்தில் எதிர்கொண்ட கஸ்டிங் கவுச் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஒருமுறை ஒரு காஸ்டிங் ஏஜென்ட் தனது போர்ட்ஃபோலியோவை நிராகரித்துவிட்டு, தவறான நோக்கத்துடன் தன்னை அணுகியதாக அவர் கூறினார். அந்த நபர் ரன்வீரை ‘ஸ்மார்ட் மற்றும் செக்ஸி’ என்று கூறி அநாகரீகமாகத் தொட முயன்றுள்ளார்.
இதற்கு ரன்வீர் கடும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்ததால் அந்த நபர் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அந்த ஏஜென்ட் பலரிடமும் இதேபோல் நடந்து கொண்டது தெரிய வந்தது. ‘துரந்தர் 2’ படம் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரன்வீர் சிங்கின் இந்த பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.