திருமண புகைப்படங்களை தொலைத்த போட்டோகிராபர் ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
March 13, 2026

திருமணத்தின் பொன்னான தருணங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துத் தருவதாகக் கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, பின்னர் தரவுகளை கவனக்குறைவாகத் தொலைத்த சென்னை புகைப்படக் கலைஞர் பிரவீன் ராஜிற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடும் அபராதம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட ரசிகா தொடர்ந்த வழக்கில், திருமண ஆல்பம் வழங்காதது சேவை குறைபாடு என நீதிமன்றம் உறுதி செய்தது.
நீதிமன்றத் தலைவர் மோகன்தாஸ் வழங்கிய தீர்ப்பில், போட்டோகிராபர் பெற்ற முழுத் தொகையையும் 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மணமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ஒரு லட்ச ரூபாயும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.