திருமண நாளில் ஹசீனாவுக்கு தூக்குத் தண்டனை: வியூகமா? தற்செயலா? வங்கதேசத்தில் விவாதம் தீவிரம்

திருமண நாளில் ஹசீனாவுக்கு தூக்குத் தண்டனை: வியூகமா? தற்செயலா? வங்கதேசத்தில் விவாதம் தீவிரம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கையில் நவம்பர் 17 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) அன்றுதான் அவருக்கு மரண தண்டனையை அறிவித்தது. மேலும், 58 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (நவம்பர் 17, 1967) பிரபல பெங்காலி இயற்பியலாளர் டாக்டர் எம்.ஏ. வாஜித் மியாவை அவர் மணந்தார். அவரது திருமண நாள் அன்றே தீர்ப்பு வெளியானதால், சமூக ஊடகங்களில் கடுமையான விவாதம் கிளம்பி, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

தீர்ப்பு வெளியாவதற்கான ஆரம்ப தேதி நவம்பர் 14 ஆக இருந்தது, பின்னர் அது நவம்பர் 17 ஆக மாற்றப்பட்டது. இடைக்கால அரசின் இந்த முடிவை குறித்து, சில நெட்டிசன்கள் இந்த சிறப்பு நாள் வேண்டுமென்றே தேர்வு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், வேறு சிலர் இதை வெறும் தற்செயல் என்று கருதுகின்றனர். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கானுக்கும் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதால், இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவது நிச்சயமற்றது என்று அவரது மகன் சஜீப் வாஜித் ஜாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *