திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமான ஒரு ஆண், மற்றொரு பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் லிவ்-இன் உறவில் வாழ்வது சட்டப்படி குற்றமாகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக ஒழுக்கத்தை விட தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் முக்கிய கடமை என்று நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது. வயது வந்த இருவர் இணைந்து வாழ்வதை உறுதி செய்வதும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதும் காவல்துறையின் பொறுப்பாகும்.

ஷாஜஹான்பூரைச் சேர்ந்த தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு உடனடியாகப் பாதுகாப்பு வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி குற்றம் ஏதும் இல்லாதபோது, சமூகக் கருத்துக்கள் குடிமக்களின் உரிமைகளில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தம்பதியினரின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறைக்குக் கடும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *