திருமணத்திற்கு 14 நாட்களே இருந்த நிலையில் காதலியுடன் மாயமான மணப்பெண்

செய்தி பிரிவு : பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில், தனது திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், லக்விந்தர் கவுர் என்ற இளம் பெண் தனது பெண் தோழியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். ஜனவரி 14-ஆம் தேதி இவருக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், சுனிதா என்ற பெண் லக்விந்தரை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுனிதா ஏற்கனவே லக்விந்தரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன் என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது.
டிசம்பர் 24 முதல் இருவரும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணத்திற்காக கடன் வாங்கி நகைகளும் சீர்வரிசைகளும் தயாராக இருந்த நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் குடும்பத்திற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மேஜர் என்பதால், சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்று பெண் காவல்துறை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.