திருமணத்திற்காக தொடரின் நடுவே விடுப்பு கேட்ட குல்தீப் யாதவ் பிசிசிஐ எடுக்கும் முடிவு என்ன?

திருமணத்திற்காக தொடரின் நடுவே விடுப்பு கேட்ட குல்தீப் யாதவ் பிசிசிஐ எடுக்கும் முடிவு என்ன?

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இந்த மாதமே திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, விடுப்பு கேட்டு அவர் பிசிசிஐயிடம் (BCCI) விண்ணப்பித்துள்ளார். நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் விடுப்பு கேட்டதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 22-ஆம் தேதி குவாஹாட்டியில் தொடங்குகிறது. இந்நிலையில், முதல் டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பங்களித்த குல்தீப் விளையாடாமல் போனால் அது அணிக்கு சவாலாக இருக்கும். பிசிசிஐ தரப்பில், அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே அவரது விடுப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *