திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நண்பனைத் தாக்கிய மாணவன்
March 12, 2026

திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் அருகே சிறுவர்களுக்கிடையே ஏற்பட்ட சாதாரண வாய் தகராறு வன்முறையாக மாறியது. இதில் 16 வயது சிறுவன் ஒருவன் அவனது நண்பராலேயே அரிவாளால் தாக்கப்பட்டார். காயமடைந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிறுவனைப் பிடித்துள்ளனர். இது குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.