திரிஷ்யம் பாணி கொலை மகாராஷ்டிராவில் அரசு கல்லூரி பேராசிரியர் உடல் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

திரிஷ்யம் பாணி கொலை மகாராஷ்டிராவில் அரசு கல்லூரி பேராசிரியர் உடல் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் ராஜபாவ் லோந்தே கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தகராறு காரணமாக விஷால் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு பேராசிரியரை பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். கொலையை மறைக்க மூன்று நாட்களுக்கு முன்பே ஜேசிபி இயந்திரம் மூலம் காட்டில் குழி தோண்டி உடலைப் புதைத்தது சினிமா பாணியிலான குற்றச்செயலை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

சுமார் 40 நாட்களாக காணாமல் போனவரைத் தேடி வந்த குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி மற்றும் மொபைல் சிக்னல் உதவியுடன் நான்கு பேரைக் கைது செய்தனர். கெவ்ராய் தாண்டா வனப்பகுதியிலிருந்து பேராசிரியரின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. திட்டமிட்ட கொலை மற்றும் சாட்சியங்களை அழித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸ் கமிஷனர் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *