திமுக வேட்பாளர் பட்டியல் தாமதமாவது ஏன் பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்

திமுக வேட்பாளர் பட்டியல் தாமதமாவது ஏன் பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தும் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. காங்கிரஸ், தேமுதிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கக் கோரி பிடிவாதம் பிடிப்பதே இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளை விட்டுக் கொடுக்க கூட்டணிக் கட்சிகள் மறுத்து வருகின்றன.

அதிமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் முந்துள்ள நிலையில் திமுகவின் 175 தொகுதிகளுக்கான பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடனான இழுபறி இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்யப்பட்ட பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *