திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக மற்றும் தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
தேர்தல் ஆணையம் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேமுதிகவுக்கான இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக திமுகவுடன் இணைந்து தேமுதிக தேர்தலைச் சந்திக்கவிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.