திமுக அரசின் பாசிச நடவடிக்கையை தவெக தலைவர் விஜய் அதிரடியாக விளாசுகிறார்

திமுக அரசின் பாசிச நடவடிக்கையை தவெக தலைவர் விஜய் அதிரடியாக விளாசுகிறார்

பெரம்பூர் தேர்தல் பரப்புரைக்குத் திட்டமிட்டபடி அனுமதி வழங்காமல், மாநகராட்சி மூலம் திடீர் பள்ளங்களைத் தோண்டி முட்டுக்கட்டை போட்ட திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த பாசிசத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், உரிய நேரத்தில் அனுமதி கோரியும் வேண்டுமென்றே தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அதிகார பலத்தால் அடக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை என விஜய் சாடியுள்ளார். ஒரு புதிய கட்சியின் உரிமையை நசுக்கும் இத்தகையச் செயல்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார். இந்த நேரடி மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *