தினமும் ஒரு கிவி போதும்.. பல பிரச்னைகளுக்கு தீர்வு!
May 28, 2025

கிவி பழம் நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் முக்கியமான கனிமங்கள் நிறைந்தது. தினமும் ஒரு கிவி சாப்பிடுவதால், நமது உடல் பல நன்மைகளை பெறுகிறது. முதலில், இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும் சக்தி கொண்டது. அதோடு, வயிற்று பிரச்சனைகள் மற்றும் கோளாறுகளை குறைக்கும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கிவியில் உள்ள லுடீன் என்ற பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமானது. இது கண்பார்வை குறையும் அபாயத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனினும் சிறுநீரக கற்கள் அல்லது மகரந்த ஒவ்வாமை போன்ற உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கிவி பழத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆகையால், கிவி பழம் உடலில் பல நோய்களுக்கு எதிரான ஒரு இயற்கை மருந்தாகும்.