தவெக ஆதரவை விலக்கி திமுக பக்கம் சாய்ந்தது ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி

தவெக ஆதரவை விலக்கி திமுக பக்கம் சாய்ந்தது ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் திருப்பமாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் எம்.எப்.தமீம், திமுகவுக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்த தமீம், ஆதரவு கடிதத்தை வழங்கினார். தவெக தனது முதற்கட்ட வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்சி திடீரென திமுக பக்கம் மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக தங்களின் கட்சி முழுமையாகப் பணியாற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *